|
|
About TRUST
அன்பு நண்பர்களே !
வணக்கம் ! அன்பும், அறிவும் தான் உலகில் ஆற்றல் வாய்ந்தவை. இவ்விரண்டுக்கும் தான் அதிக ஈர்ப்பு சக்தி உண்டு. உலகில் வாழும் அனைத்து உயிரினங்களிலும் மேம்பட்ட உயிரினமாக மனிதனை ஆக்குவதும் இவ்விரண்டும்தான். இந்த அன்பையும், அறிவையும் மனிதனுக்குள் அதிகபட்ச அளவுக்குக் கொண்டுவருவது கல்வி. இக்கல்வியில் தமிழர்கள் மேலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த தளராத முயற்சியாளர்களுள் முந்தி நிற்பவர் கர்மயோகி காமராசர் அவர்கள்.மேலும் படிக்க...
.
|
|
|
OUR MISSION
நாட்டில் கவலையற்ற சமுதாயத்தை அமைக்க வேண்டும். அதையும் நாம் வாழ் நாளிலேயே செய்துவிட வேண்டும். உணவு, வீடு, கல்வி, வசதி எதுவும் இல்லை என்ற புகாரே மக்களிடம் இருக்கக்கூடாது -காமராஜர்
எண்ணம் மற்றும் நோக்கம்
திறமையிருந்தும் அதிக மதிப்பெண்கள் பெற்றும், உயர்கல்வி பயில வழியில்லாமல் தவிக்கும் கிராம பகுதி மாணவர்களுககு அவர்கள் விரும்பும் உயர்கல்வி பயில வாய்பினை ஏற்படுத்தித்தருதல். அதற்கு அனைத்து வகையிலும் உதவுதல்
இளைஞர்களை நன்னெறிப்படுத்தி சரியான வழியில் வாழ்க்கை அமைத்துக் கொள்ள வழிகாட்டுதல் போன்ற கல்வி சார்ந்த பிற நலத்திட்டங்கள்
இது போன்ற செயல்பாடுகள் மூலம் நாம் பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் அன்னை பூமி பாரதத்திற்கு நன்றி பாராட்டுதல்
|